கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா நடித்த அறம் படம் மிகவும் பிரபலமடைந்ததுடன் நயன்தாராவுக்கும் நல்ல பெயர் பெற்றுக் கொடுத்தது. இதையடுத்து அறம் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க கோபி நயினார் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தநிலையில் நயன்தாரா பிற படங்களில் ஒப்பந்தமாகியருப்பதனால் இருப்பதால் கோபி நயினார் சித்தார்த்தை வைத்து அறம் 2 படத்தை இயக்கப் போவதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
சித்தார்த்தை வைத்து கோபி நயினார் படம் எடுப்பது உண்மை தான் என்ற போதிலும் அது அறம் 2 இல்லை எனவும் முற்றிலும் வேறு கதை எனவும் இது குறித்த தகவல்களை கோபி நயினாரே விரைவில் வெளியிட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறம் 2 படத்தின் ஷூட்டிங் ஏப்ரல் மாத இறுதி அல்லது மே மாத ஆரம்பித்தில்தான ஆரம்பமாகும் என்பதனால் சித்தார்த்தை வேறு படம் ஒன்றை இயக்க முடிவு செய்துள்ளதாக கோபி நயினார் தெரிவித்துள்ளார். அறம் 2 படத்திலும் நயன்தாராதான் மதிவதனியாக வந்து நடிப்பார் எனவும் அறம் 2 படத்தில் அரசியல் பிரச்சனைகள் குறித்து காண்பிக்கப்படும் எனவும் கோபி நயினார் தெரிவித்துள்ளார்.