இலங்கை பிரதான செய்திகள்

காலியில் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்…

காலியில் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். வெலிகம பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். வெலிகம பகுதியில் இருந்து தமது உறவினர்கள் வீட்டுக்கு வந்திருந்த சமயம் மக்குலுவ ​ஜூம்மா பள்ளிவாசல் நீர்த் தடாகத்தில் நீராடச் சென்ற நிலையில் அவர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது

நீரில் மூழ்கிய இருவரும் மீட்கப்பட்டு கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னரே உயிரிழந்துள்ளனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களின் சடல​ம் பிரேதப் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டுவருகின்றனர்.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link