குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தமது உருவப்படத்தை பயன்படுத்தும் உரிமை ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் மலர்மொட்டு சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கே உண்டு என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். கொழும்பு சுகததாச மைதானத்தில் நடைபெற்று வரும் பொதுஜன முன்னணியின் உள்ளுராட்சி மன்ற பிரச்சார ஆரம்ப நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தேர்தல் ஆணையாளருக்கு மஹிந்த ராஜபக்ஸ அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மாறுபட்ட நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார். உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் சுயாதீனக் குழுக்கள் சுவரொட்டிகள், பதாகைகளில் தனது உருவப்படத்தை பயன்படுத்திக்கொள்வதனை எதிர்க்கவில்லை என தெரிவித்துள்ளார். இது தொடர்பில் எழுத்து மூலம் அவர் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது