Home பிரதான செய்திகள் சிறந்த அரேபிய கால்பந்து வீரராக மொகமட் சாலா தெரிவு

சிறந்த அரேபிய கால்பந்து வீரராக மொகமட் சாலா தெரிவு

by admin

2017-ம் ஆண்டுக்கான சிறந்த அரேபிய கால்பந்து வீரர் என்ற விருதுக்கு லிவர்பூல் கழகத்தின் மொகமட் சாலா (Mohamed Salah) தேர்வாகியுள்ளார்.

எகிப்து கால்பந்து அணியின் முன்கள வீரரான மொகமட் சாலா ஆர்எஸ் ரோமா அணியில் இருந்து லிவர்பூல் அணிக்கு மாறியிருந்தார். இந்தநிலையில் மொகமட் சாலா பிரிமீயர் லீக் தொடரில் அடித்த 17 கோல்களுடன் சேர்த்து லிவர்பூல் அணிக்காக மொத்தமாக 23 கோல்கள் அடித்துள்ளார்.

அத்துடன் ரஸ்யாவில் இந்த வருடம் நடைபெறவுள்ள கால்பந்து உலகக்கோப்பை தொடரில் எகிப்து அணி தகுதிபெற மொகமட் சாலா முக்கிய பங்காற்றியிருந்தார்.  இந்நிலையில் அரேபிய நாடுகளில் உள்ள கால்பந்து வீரர்களில் 2017ம் ஆண்டின் சிறந்த வீரராக மொகமட் சாலா தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சவுதி அரேபியாவின் அல்-ஹிலால் அணிக்காக விளையாடும் சிரிய வீரரான ஒமர் கிரிபின் 2-வது இடத்தையும், மற்றொரு சிரிய வீரரான ஒமர் அல்-சோமா 3-வது இடத்தையும் பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More