குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக கருத்து வெளியிட்டதாக ஜெர்மனிய அரசியல்வாதி ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஜெர்மனியின் AFD கட்சியின் பிரதித் தலைவியான பீட்ரிக்ஸ் வொன் ஸ்டோர்ச் ( Beatrix von Storch ) ) என்ற அரசியல்வாதியே இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டவராவர்.
புத்தாண்டு காலத்தை முன்னிட்டு டுவிட்டரில் முஸ்லிம் சமூகத்தை இழிவுபடுத்தி பதிவொன்றை இட்டிருந்தார் என இவர் மீது குற்றம் சுமத்;தப்பட்டுள்ளது. குரோத உணர்வைத் தூண்டியதாக குறித்த அரசியல்வாதிக்கு எதிராக ஜெர்மனிய காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
முஸ்லிம் சமூகத்தை இழிவு படுத்தி வெளியிட்ட பதிவினைத் தொடர்ந்து அவரின் டுவிட்டர் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது.