இலங்கை பிரதான செய்திகள்

இலங்கையில் 7500 ஓரினச் சேர்க்கையாளர்கள் உள்ளனர்


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

இலங்கையில் சுமார் 7500 ஓரினச் சேர்க்கையாளர்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தேசிய எயிட்ஸ் தடுப்புப் பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது. 1.2 மில்லியன் பேரிடம் எச்.ஐ.வீ தொற்று தொடர்பில் சோதனை நடத்தப்பட்டுள்ளதில் 280 பேருக்கு எச்.ஐ.வீ நோய்த் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

ஆண்கள், பெண்கள், சிறுவர் சிறுமியர் என பல்வேறு தரப்பினருக்கும் இவ்வாறு எயிட்ஸ் நோய்த் தொற்று பரவியுள்ள அதேவேளை ஓரினச் சேர்க்கையாளர்களே அதிகளவில் எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிபிலீஸ், கோனோரியா போன்ற பாலுறவு நோய்களினாலும் பலர் பாதிக்கப்பட்டுள்ளமை சோதனைகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. கொழும்பு, கம்ஹா, காலி, களுத்துறை மற்றும் குருணாகல் மாவட்டங்களில் அதிகளவான நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.