162
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தமது ஆட்சிக் காலத்தில் நாடு தன்னிறைவாகக் காணப்பட்டது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
தற்போது நாட்டில் அரிசி உரங்கள் என்பனவற்றை இறக்குமதி செய்வதற்கு தொலைபேசி அழைப்புக்களை ஏற்படுத்த நேரிட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரிசி மற்றும் உணவுப் பொருட்களுக்காக காலி முகத் திடலில் கப்பல்களுக்காக மக்கள் காத்திருக்க நேரிட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். கொழும்பு சுகததாச மைதானத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
Spread the love