201
இஸ்ரேலில் குடியேறியுள்ள ஆபிரிக்க நாட்டு புலம்பெயர் மக்களை தமது நாட்டிருந்து உடனடியாக வெளியேறுமாறு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. எதிர்வரும் 90 நாட்களுக்குள் அவர்கள் இஸ்ரேலைவிட்டு வெளியேற வேண்டும் எனவும் வெளியேறுபவர்களுக்கு 3500 அமெரிக்க டொலர்கள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு வெளியேறுபவர்கள் தமது சொந்த நாடுகளுக்கோ அல்லது அல்லது வேறு ஏதேனும் ஒரு நாட்டுக்கோ செல்ல வாய்ப்பு வழங்கப்படும் எனவும் அவ்வாறு வெளியேற மறுப்பவர்கள் ஏப்ரல் மாதம் முதல் கைது செய்யப்படுவர் எனவும் இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது.
Spread the love