குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வெற்றியீட்டுவது அரசாங்கத்திற்கு முக்கியமானது என பிரரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 2020ம் ஆண்டில் அரசாங்கம் ஆட்சி அமைப்பதற்கு உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் தற்போது வெற்றி பெறுவது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறிகொத்தவில் நடைபெற்ற கட்சியின் உள்ளுராட்சி மன்ற வேட்பாளர்களுடன் நடத்திய சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கடின உழைப்பின் மூலம் வெற்றியை ஈட்டிக்கொள்ள முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். அபிவிருத்திப் பணிகளில் உள்ளுராட்சி மன்றங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.