குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அனைத்து அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்படுவர் என எதியோப்பிய பிரதமர் ஹைலேமியாம் டெசலேக் ( Hailemariam Desalegn )தெரிவித்துள்ளார். அரசியல் பேச்சுவார்த்தைகளை தொடரும் நோக்கில் இவ்வாறு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மிகவும் சர்ச்சைக்குரிய மேகலாவி ( Maekelawi ) தடுப்பு முகாமை மூடுவதற்கு எதியோப்பிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
(Maekelawi prosion camp)
இதற்கு முன்னதாக எதியோப்பிய அரசாங்கம் நாட்டில் அரசியல் கைதிகள் எவரும் இல்லை எனவும், குற்றவாளிகளே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்திருந்தது. தற்போது இந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தநிலையில் இந்த தீர்மானம் வரவேற்கப்பட வேண்டியது என சர்வதேச மன்னிப்புச் சபை அறிவித்துள்ளது.