இஸ்ரேலிடமிருந்து ஏவுகணைகளை வாங்குவதற்காக சுமார் 3,100 கோடி ரூபா மதிப்பில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்துள்ளது. இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு இஸ்ரேல் வருத்தம் தெரிவித்துள்ளது.
பீரங்கிகளை தகர்க்கவல்ல ஏவுகணைகளை இஸ்ரேலிடமிருந்து வாங்குவதற்கு முடிவு செய்த இந்தியா இதற்காக, இஸ்ரேல் அரசின் ஆயுதத் தளவாட நிறுவனமான ரபேலுடன் 3,100 கோடி ரூபாக்கு அண்மையில் ஒப்பந்தம் மேற்கொண்டிருந்தது. இந்நிலையில், இந்த ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்துவிட்டதாக இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
ஏவுகணை வாங்குவதற்கான ஒப்பந்தத்தை இந்தியா திடீரென ரத்து செய்துள்ளது எனவும் இரு நாட்டு ராணுவ விதிமுறைகளுக்கு உட்பட்டே இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது எனவும் தெரிவித்த ரபேல் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் இந்திய சுற்றுப்பயணம் நெருங்கி வரும் சூழலில், இந்தியாவின் இந்த அறிவிப்பு வருத்தமளிக்கிறது என்று தெரிவித்துள்ளார். –