Home இந்தியாமும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ நால்வர் பலி…

மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ நால்வர் பலி…

by admin

மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் 9 பேர் காயமமைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று நள்ளிரவு 2.00 மணியளவில் திடீரென இந்த தீ விபத்து ஏற்பட்டதாகவும் உடனடியாக தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குhயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்பையில் கடந்தவாரம், கமலா Nலை வளாகத்தில் ஏற்பட்ட தீவிபத்து காரணமாக 14 பேர் உயிரிழந்ததுடன் 55 பேர் காயமடைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More