இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் எலேனோர் புயல் தாக்கம் காரணமாக 3 பேர் உயிரிழந்துள்ளனர். வடக்கு ஐரோப்பிய நாடுகளை அண்மித்த அட்லாண்டிக் கடல் பகுதியில் மையம் கொண்டிருந்த எலேனோர் புயல் நேற்று ஐரோப்பிய நாடுகளை தாக்கியது.
இதில் இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளில் பயங்கர்காற்றுடன் மழை பெய்து வருகின்றது. பிரான்சில் 160 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசியதனால் பாரீஸ் நகரம் கடுமையான பாதிப்பை சந்தித்ததுடன் ஈபிள் கோபுரம் மூடப்பட்டதுடன் அங்கு பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அல்ப்ஸ் மலையில் மலையேற்ற குழுவினர் புயலில் சிக்கிக் கொண்டதில் ஒருவர் உயிரிழந்ததுடன் 15 பேர் காயம் அடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது இதேபோல ஸ்பெயினின் பொஸ்கோ கடற்கரையில் இருந்தவர்களை கடல்நீர் இழுத்து சென்றதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் மணிக்கு 147 கிலோ மீட்டர் வேகத்திலும் ஜெர்மனியில் 120 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியதிலும் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன. . சுவிட்சர்லாந்தும் மோசமாக பாதிக்கப்பட்டதாகவும் அங்குள்ள லெங்க் என்ற இடத்தில் சூறைக்காற்றினால் புகையிரதம் தடம்புரண்டு கவிழ்ந்ததில் பல பயணிகள் காயம் அடைந்தனரஸ்ரீர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில் உள்ள லூசர்ன் நகரில் மிக அதிகமாக 195 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசியது. இதனால் அங்கும் கடுமையான பாதிப்பு நிலவியது. பெல்ஜியம், நெதர்லாந்து நாடுகளில் புயல் பாதிப்பு இருந்தது. ஆனாலும் அங்கு மோசமான பாதிப்பு ஏற்படவில்லை. இங்கிலாந்து மற்றும் பிரான்சில் பல விமான நிலையங்கள் மூடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.