158
யாழ் போதனா வைத்தியசாலையில் சிசு பிறப்பு வீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு யாழ் போதனா வைத்தியசாலையில் 5746 சிசுக்கள் பிறந்துள்ளதாகவும் பல வருடங்களுடன் ஒப்பிடுகையில் இது 12 வீத அதிகரிப்பினைக் காட்டுவதாகவும் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் பீ. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, யாழ் போதனா வைத்தியசாலையின், சிசு இறப்புவீதம் ஒரு வீதமாக மாத்திரமே காணப்படுவதமாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Spread the love