கச்சா எண்ணெய் உற்பத்தியில் அமெரிக்கா இந்த வருடம் முதலிடத்தினை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கச்சாய் எண்ணெய் உலகில் சவூதி அரேபியாவின் பொற்காலம் முடிவுக்கு வரும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் உற்பத்தியில் சவூதிதான் முன்னிலை வகித்து வருகின்றது. அந்த நாட்டின் மொத்த வருமானத்தில் 90 சதவிகித வருமானம் எண்ணெய் பொருட்கள் மூலம்தான் கிடைக்கின்றது.
அதேபோல் ஐக்கிய அரபு அமீரகமும் கச்சா எண்ணெய் உற்பத்தியில முன்னிலை வகிப்பதுடன் 80 சதவிகித வருமானத்தினை இதன் மூலம் பெற்று வருகின்றது. மேலும் ரஸ்யாவும் இந்த பட்டியலில் முன்னிலை வகித்து வருகின்ற நிலையில் தற்போது அமெரிக்காவின் கச்சா எண்ணெய் உற்பத்தி மிகவும் வேகமாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
2017ல் அமெரிக்கா கச்சா எண்ணெய் உற்பத்தியில் அமெரிக்கா அசுர வளர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2018 இலும் உற்பத்தி தற்போது இருப்பது போல் தொடர்ந்தால் அமெரிக்கா இதில் முதல் இடம் பிடித்தவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது