குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மத்திய வங்கி பிணை முறி மோசடி விவகாரம் தொடர்பில் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பொறுப்பு சொல்ல வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை இந்தக் குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுவித்துள்ளார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிணை முறி மோசடியுடன் தொடர்புடையவர் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரன் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். 2008ம் ஆண்டு முதலான பிணை முறி கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் விசாரணை நடத்துவது மிகவும் பொருத்தமானதாக அமையும் எனவும் இவ்வாறான விசாரணைகளை நடத்தினால் மட்டுமே 2015ம் ஆண்டில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் பற்றிய உண்மைகளை அம்பலப்படுத்திக்கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறெனினும் அண்மைய பிணை முறி மோசடிகள் தொடர்பிலான விசாரணைகள் கிடப்பில் போட்டுவிடப்படக் கூடாது என நாமல் ராஜபக்ஸ கோரியுள்ளார்.