குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி உதவிகளை வழங்கிய 13 பேருக்கு எதிராக சுவிட்சர்லாந்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. சுமார் 15 பில்லியன் சுவிஸ் பிராங்குகள் இவ்வாறு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சுவிட்சர்லாந்து, ஜெர்மனி மற்றும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் மீதே இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. உலகத் தமிழ் இணைப்புக்குழுவின் உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் இந்தக் குழுவில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. போலி சம்பளப் பட்டியல்கள் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி கடன் பெற்றுக்கொண்டு இவ்வாறு நிதி திரட்டப்பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஊழல் மோசடி, பணச் சலவை, கப்பம் பெற்றுக்கொள்ளல் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் இந்த நபர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எவ்வாறெனினும் சுவிட்சர்லாந்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கப்படாத காரணத்தினால், பயங்கரவாதத்திற்கு நிதி திரட்டிய குற்றச்சாட்டின் அடிப்படையில் இவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 comment
இங்கையில் நடந்த
இறுதி யுத்தத்தின் போது 150000 அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர் இதற்கு மூலகாரணம் இந்தியா,,அபோது இந்த மனித உரிமைக்காக பேசும் நாடுகள் எங்கே போனார்கள்? இப்போது பாதிக்கப்பட்ட தமிழருக்காக நிதி சேகரிப்பில் ஈடுபடும் எங்கள் உறவுகளை மீது வழக்கு தொடுப்பது எந்த வகையில் நியாயமாகும்.?