இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு கடந்த 2015-ம் ஆண்டு சென்ற போது இந்தியாவில் செயல்படும் 108 இலவச ஆம்புலன்ஸ் சேவையை இலங்கையிலும் அமுல்படுத்த உறுதி அளித்திருந்தார். அதன்பேரில் இந்திய அரசு சார்பில் இலங்கைக்கு 88 அம்புலன்ஸ் வாகனங்களும் வழங்கப்பட்டதுடன் 600 பேருக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டது.
சுவசெரிய இலவச அம்புலன்ஸ் சேவை என பெயரிடப்பட்ட இத்திட்டத்தினை இலங்கை முழுவதும் விரிவுபடுத்த இலங்கை நாடாளுமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்காக இந்தியா சுமார் 97 கோடி ரூபா மதிப்பிலான மேலும் 209 அம்புலன்ஸ் வாகனங்களை வழங்கி 1,300 ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்ச்சி கொழும்பில் நேற்று முன்தினம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் நடைபெற்றது. இந்த ஒப்பந்தத்தில் இலங்கை வெளியுறவு அமைச்சர் ஹர்ஷ டி சில்வா, இலங்கைக்கான இந்திய தூதர் தரண் ஜித் சிங் சந்து ஆகியோர் கையொப்பமிட்டுள்ளனர்.