கேரளாவின் முன்னாள் போக்குவரத்து அமைச்சர் தோமஸ் சாண்டிக்கு எதிராக நில அபகரிப்பு வழக்கு பதிவு செய்ய கோட்டயம் விஜிலென்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி கூட்டணி அரசில் போக்குவரத்து அமைச்சராக இருந்த தோமஸ் சாண்டி. ஆலப்புழையில் உள்ள லேக் பலஸ் ரிசார்ட் எனும் தங்கும் விடுதியின் உரிமையாளர் ஆவார்.
இந்நிலையில் தோமஸ் சாண்டி சட்டவிரோதமாக விவசாய நிலத்தை சமன்படுத்தி, அந்த விடுதிக்கு அரசுப் பணத்தில் வீதி அமைத்துள்ளதாகவும் அரசு நிலத்தை அபகரித்து வாகன நிறுத்துமிடம் ஏற்படுத்தியுள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆலப்புழை மாவட்ட ஆட்சியர் விசாரணை செய்து அறிக்கை அளித்துள்ள நிலையில் அதை ரத்துசெய்யக் கோரி கேரள உயர் நீதிமன்றத்தை தோமஸ் சாண்டி நாடிய போதிலும் ; நீதிமன்றத்தினால் விடுக்கப்பட்ட கண்டனத்தினை அடுத்து அவர் பதவி விலகினார்.
இந்தநிலையில் தோமஸ் சாண்டிக்கு எதிராக நில அபகரிப்பு வழக்குப் பதிவு செய்ய நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டதுடன் மேலும் வரும் 18-ம் திகதி முதல்கட்ட அறிக்கை அளிக்கவும் ஊழல் கண்காணிப்பு துறைக்கு உத்தரவிட்டுள்ளது.