குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அமெரிக்காவிற்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்ரமசூரியவிற்கு எதிராக திறந்த பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டே நீதிமன்றினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தூதுவராக கடமையாற்றிய காலத்தில் 3 லட்சத்து 32 ஆயிரம் அமெரிக்க டொலர்களை துஸ்பிரயோகம் செய்தார் என ஜாலிய மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இதன் அடிப்படையில் கைது செய்யப்பட்ட பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார். மருத்துவ சிகிச்சைகளுக்காக இவ்வாறு ஜாலியவிற்கு பிணை வழங்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் நீதிமன்றில் முன்னிலையாகத் தவறிய காரணத்தினால் இவ்வாறு பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.