சவூதி அரேபியாவில் அமுல்படுத்தப்பட்டுள்ள புதிய பெறுமதிசேர் வரிக்கும், எரிபொருள் விலை உயர்வுக்கும் அரச அதிகாரிகளுக்கு நட்டஈடு வழங்கப்பட உள்ளது. உள்ளூர் பெட்ரோலின் விலையை சவூதிஅரேபியா இரட்டிப்பாக உயர்த்திருந்ததுடன் உணவு உட்பட பெரும்பாலான பொருட்களுக்கும், சேவைகளுக்கும் 5 சதவீதம் பெறுமதி சேர் வரியையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
சவூதி அரேபியாவில் 90 வீதத்துக்கும் அதிகமான வருமானம் எண்ணெய் வளங்கள் மூலமே கிடைத்தது வருகின்ற நிலையில் எண்ணெய் தவிர தங்களது வருமான ஆதாரங்கள் வளைகுடா நாடுகள் பல்வகைப்படுத்த வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றன.
இந்தநிலையில் 2015-ம் ஆண்டு செலவுகளை குறைப்பதற்காகப் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றுபவர்களின் சம்பளங்களைக் குறைத்திருந்தது. இதனால் ஏற்பட்ட பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யும் முகமாகவே இவ்வாறு இழப்பீடு வழங்கப்படவுள்ளது. எனினும் குறித்த சம்பள குறைப்புகள் கடந்த ஆண்டு நீக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.