148
ஏறாவூர், புன்னைக்குடா கடலில் நீராடிய நிலையில் காணாமல் போன மாணவன், இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஏறாவூர், மாக்கான் மாக்கார் வித்தியாலயத்தில் சாதாரண தரத்தில் கல்வி கற்கும் 16 வயதான அப்துல் ஸலாம் அஸ்பஹான எனும் மாணவனின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. குறித்த மாணவன், நேற்றுப் பிற்பகல் புன்னைக்குடா கடலில் நீராடிக் கொண்டிருக்கும்போது, காணாமல் போயிருந்தார். இந்தநிலையில் மீனவர்களும் கடற்படையினரும் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கை காரணமாக இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
Spread the love