குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் கட்சியில் போட்டியிடுதற்கு பாலியல் லஞ்சம் கோரப்பட்டதாக பிரபல நடிகையொருவர் குற்றம் சுமத்தியுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் சார்பில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு இவ்வாறு பாலியல் லஞ்சம் கோரப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். மதுசா ரணசிங்க என்ற நடிகையே இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.
நடிப்புத்துறையிலிருந்து விடுபட்டு அரசியலில் ஈடுபடத் தாம் தீர்மானித்திருந்ததாகத் தெரிவித்துள்ளார். எனினும், மஹிந்த ராஜபக்ஸவிற்கு நெருக்கமான அதிகாரியொருவர் வேட்பாளர் பட்டியலில் தமது பெயரை உள்ளடக்குவதற்கு பாலியல் லஞ்சம் கோரியதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் குறித்து முன்னாள் ஜனாதிபதியிடம் தாம் முறைப்பாடு செய்த போதிலும் அதற்கு வருத்தம் தெரிவித்த போதிலும், அந்த அதிகாரிக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.