Home இலக்கியம் கேப்பாபிலவு, மனதினுள் மரித்திடாரணங்கள் – முல்லைதாரிணி:-

கேப்பாபிலவு, மனதினுள் மரித்திடாரணங்கள் – முல்லைதாரிணி:-

by admin


கேப்பாபிலவு

அடங்கி இருந்து
உடைமையைபெற்றிட
உறங்கியிருந்தனர்
முட்கம்பிக்குள்ளும் முகாம்களுக்குள்ளும்
முடிவு!
அடக்கிவந்தவர் உடைமைகளை
முடக்கிக்கொண்டனர்
முடிந்தளவுமுனுமுனுத்தனர்
முற்றுப்புள்ளியில்லை

பசுமைவயல்
தென்னந்தோப்பு
குளிரூட்டும் தென்றல்
அப்புச்சி இருந்தமாமரம்
அதன் கீழ் ஒருஊஞ்சல் – என
கண்ணைநிறைத்திடும் நிணைவுகளுடனும்
விவசாயம் செய்யதுடித்திடும் மனதுடனும்
அகிம்சைவழியில் உரிமைகள் கோரினர்

பெரியதலைகள் – உதவிக்கரங்களை
நீட்டுவதுபோல் நீட்டிமுடக்கிக்கொண்டன
உரிமைகள் வாய் மூட
பலவாய்கள் திறந்து
விலைகளும் பேசின
வலக்கை இடக்கைக்கு
பணம் கொடுக்கவேண்டுமாம்
பரிதாபநிலை!பாருங்கள்

வலுப்பெற்றபோராட்டங்கள்
வலுவிழக்கின்றன
ஒற்றுமைஉடைபடும் போது– ஆம்
அடக்கிவாழ்வோர்
உணர்வுகள் உறங்கும்
இடத்தினைஉடைத்திடும்
உத்திகண்டனர் – அதில்
வெற்றியும் கண்டனர்

இன்றும்
அடக்குவோர் அடங்குவோர்
மாற்றமில்லை
உத்தியும் மாற்றமில்லை
அதேஉத்தியுடன்
இன்றும் கேப்பாபிலவு

முல்லைதாரிணி

மனதினுள் மரித்திடாரணங்கள்

வருடங்கள் சென்றாலும்
மனதினுள் மரித்திடாரணற்களை
மௌனமாய் யாசிக்கும்
தாய்மைஉள்ளங்களில் – தம் மகவு
தரணியில் தளையிடும் – முன்
கிள்ளிஎறியப்பட்டமையும் – அதன்
நினைவுத்தடயங்கள்
கிளறிஎறியப்பட்டமையும்……

குழந்தைப்பருவத்தில் பாலூட்டிய
ஆலிங்கணம் – அன்று
அடைந்தஆனந்தத்தை
அசைபோட்டுபார்க்கிறது
அனைத்தும் அன்றய
நிகழ்வுகளின் நிழல்களாய்

பலவருடஓட்டத்தில்
புகைப்படம் தேடும் மனதுள்ளே
சிலகேள்விகள்
மனதைஅடக்கி
மருண்டுகிடக்கிறன

இறந்தபின்னும் – அவ்வுருவம்
இனவேற்றுமைசொல்லுமா?
நினைவுகளைசுமந்துநிற்கும்
சின்னங்கள் அழிக்கப்பட்டால்
நினைவுகள் அழிந்துவிடுமா?
நினைவுகளின் வலிமையை
நியங்களேஅறியும்

மஞ்சல் உடையைக்கண்டாலே
மனதுள் முளையிடும்
மகளின் ஞாபகங்களுன் – ஒருமனது
வேலைச்சுமைஅறிந்து
பலமைல்கள் கடந்து
தண்ணீhஎடுத்துவரும் – என் மகன்
பலவருடம் கடந்தாலும்; – அவன் மறைவு
வாட்டிவிடும் – என
எண்ணமறந்தானே–என
எண்ணிடும் ஒருமனது – என
பலஎண்ணங்களுடன்
பலமனதுகள்

உணர்வுகள் உந்தப்பட்டு
உண்மைஅறிய
எத்தணிக்கும் தருணங்களில்
உண்மையின் அர்த்தம்
எதுவுமில்லை
ஏன்?ஏதற்காக இவ் இழப்பு?
என்றும் துன்பத்துடன்
என்றும் பயத்துடன்
என்றும் ஏக்கத்துடன்
மனதுள் பலமுட்டுக்கட்டைகளாய்

பூமித்தாயும
;பூமியில் வாழும்தாய்களும்
வலியின் ரணங்களால்
நாளும் செத்தவண்ணம் – யாரோசிலரின்
பேராசையின் அசைபோடலால்

முல்லைதாரிணி

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More