குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
அமிலத் தாக்குதல்களை நிறுத்தும் நோக்கம் கொண்ட ஒரு புதிய தன்னார்வத் திட்டத்தின் கீழ், 18 வயதிற்குட்பட்டவர்களுக்கு அமிலங்கள் மற்றும் அரிக்கும் பொருட்களின் (அசிற்) ஆபத்தான அளவைக் கொண்டிருக்கும் பதார்த்தங்களின் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. அபாயகரமான அமிலங்களின் (அசிற்) மூலமான தாக்குதல்களை கட்டுப்படுத்துவதே இதன் இலக்கு என கூறப்பட்டுள்ளது.
Wickes, B&Q, Screwfix and Tesco போன்ற நாட்டின் மிகப்பெரிய சில்லறை விற்பனையாளர்கள் இந்த தடை பட்டியலில் கையெழுத்திட்டுள்ளனர். இதன் மூலம் களஞ்சியங்கள், இணைய மூலமான (store and online.) பெறுதல்களின் போது பெறுனர்களின் வயதெல்லையை அறிந்துகொள்ளுதலும் உட்படுத்தப்பட்டுள்ளது. இந்த வகையில் 18 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு, பின்வரும் தயாரிப்புகள் 18 வயதிற்குள் விற்கப்பட மாட்டாது:
:: சில பொருட்கள் வடிகால் மற்றும் வண்ணப்பூச்சு ஸ்ட்ரிப்பர்ஸ் போன்ற சோடியம் ஹைட்ராக்சைட்டின் 12% அல்லது அதற்கும் மேல் உள்ள பொருட்கள்
:: செங்கல் மற்றும் உள் முற்றம் கிளீனர்கள் இதில் ஹைட்ரோகுளோரிக் அமிலம் 10% அல்லது அதற்கு மேற்பட்ட எந்த திரவப் பொருட்களும்…
: அம்மோனியம் ஹைட்ராக்சைடு மற்றும் சோடியம் ஹைபோக்ளோரைட் ஆகியவற்றின் 10% அல்லது அதற்கு மேற்பட்ட பொருட்கள்: பல துப்புரவு பொருட்கள் உள்ளடங்கியது. பொய்சன்ஸ் – அமிலப் பாவனை சட்டத்துடன் இணங்குவதற்கும் ஊழியர்களுக்கான விழிப்புணர்வை மேம்படுத்துவதற்கும் கடைகளுக்கும் இவை பரிந்துரைக்கப்படுகின்றன.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள Crime, Safeguarding and Vulnerabilityக்கு பொறுப்பான அமைச்சர் Victoria Adams “அசிட் தாக்குதல்கள் பாதிக்கப்பட்டவர்களின் மீது ஒரு பேரழிவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன, உணர்ச்சி மற்றும் உடல் ரீதியான வடுக்களை ஏற்படுத்தி உள்ளன. இந்த வகையில் பிரித்தானியாவில் உள்ள சில்லறை மற்றும் மொத்த வியாபார நிறுவனங்கள், எமது முக்கியமான இந்த திட்டத்துடன் இணைந்து அமில தாக்குதல்களை கட்டுப்படுத்தவதற்கு போராடுவார்கள் என நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.