149
மத்திய வங்கி பிணைமுறி ஊழல் தொடர்பில் குற்றவாளிகளுக்கு உயரிய தண்டனை வழங்கப்படும் எனவும், அதற்கான சகல அழுத்தங்களையும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி கொடுக்கும் எனவும் அக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் அமைச்சருமான கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்துள்ளார். இதே வேளை, தேசிய அரசாங்கத்தில் நெடுக்கடிகள் அதிகரிக்குமாயின் அமைச்சரவை கலைக்கப்பட்டு புதிய அமைச்சரவை உருவாக்கப்படும் எனவும், சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் ஜனாதிபதியுடன் இது குறித்து கலந்துரையாடவுள்ளதாகவும் கூறியுள்ளார்.
Spread the love