குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அரசாங்கம் 14.6 பி;ல்லியன் அமெரிக்க டொலர்களை கடனாகப் பெற்றக் கொண்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இந்த அரசாங்கம் ஆட்சி நடத்திய 36 மாத காலப் பகுதியில் இவ்வாறு கடன் பெற்றுக்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த நிதியைக் கொண்டு நுரைச்சோலை அனல் மின் நிலையங்கள் போன்ற ஐந்து மின் நிலையங்களையும் ஹம்பாந்தோட்டை துறைமுகம் போன்ற ஐந்து துறைமுகங்களையும், தெற்கு அதி வேக நெடுஞ்சாலை போன்ற இரண்டு நெடுஞ்சாலைகளையும் அமைக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வெளிநாட்டு செலாவணியாக பெற்றக்கொண்ட கடன் தொகைக்கு மேலதிகமாக அரசாங்கம் 5.7 ட்ரில்லியன் ரூபாவினை கடனாகப் பெற்றுக்கொண்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டு மூன்றாண்டுகள் கடந்துள்ள நிலையில் அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.