தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படம், புலிகளின் இலட்சினை அடங்கிய 2018 புது வருட வாழ்த்துக்களை முகப் புத்தகம் ஊடாக, பகிர்ந்ததாக கூறப்படும் இருவரை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
2007 ஆம் ஆண்டின் 66 ஆம் இலக்க சிவில், அரசியல் உரிமைகள் தொடர்பிலான சர்வதேச இணக்கப்பாட்டு சட்டத்தின் விதிவிதானங்களுக்கு அமைவாக இவ்விருவரும் கைது செய்யப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காவற்துறையால் கைதான, செவன் தினேஷ் குமார், விஜேகுமார் விதூஷன் ஆகிய, இரு இளைஞர்களும் , இன்று கொழும்பு மேலதிக நீதிவான் தனுஜா ஜயதுங்க முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்ட போது, எதிர்வரும் 17 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.