குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அமைச்சர் மனோ கணேசனின் குற்றச்சாட்டு அடிப்படையற்றது என முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். வடகொழும்பில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்காக பாதாள உலகக்குழு உறுப்பினர்கள் வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளனர் என மனோ கணேசன் குற்றம் சுமத்தியிருந்தார். எனினும் இந்தக் குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் கிடையாது என ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
வட கொழும்பு தொகுதிக்கு ஊடகவியலளார்கள் வந்து இந்தக் குற்றச்சாட்டு உண்மையா இல்லையா என்பதனை அறிந்து கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். தாம் சுதந்திரமாக நடமாடி வருவதாகவும், அமைச்சர் மனோ கணேசன் விசேட பாதுகாப்புடன் நடமாடி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் பாதாள உலகக்குழு உறுப்பினர்களின் பெயர் விபரங்களை அம்பலப்படுத்துமாறு அமைச்சர் மனோ கணேசனுக்கு சாவல் விடுவதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் இன, மத நல்லிணக்கத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் ஒரே கட்சி ஐக்கிய தேசியக்கட்சி எனவும் ரவி கருணாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.