குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிணை முறி கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பிலான விசாரணைகளில் பங்கேற்கத் தயார் என மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். கடந்த 2008ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரையிலான மத்திய வங்கி பிணை முறி கொடுக்கல் வாங்கல்களின் போது ஏதேனும் மோசடி இடம்பெற்றுள்ளதா என விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் எதிரில் விருப்பத்துடன் முன்னிலையாகத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி ஆணைக்குழு நிறுவப்பட்டால் அதில் முன்னிலையாகி தெளிவுபடுத்த உள்ளதாகத் தெரிவித்துள்ள அவர் தாம் கொழும்பைச் சேர்ந்தவர் எனவும், சிங்கப்பூர் பிரஜை அல்ல எனவும் எந்தவொரு நேரத்திலும் விசாரணைகளுக்கு தயார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தமது பதவிக் காலத்தில் ஏதேனும் முறைகேடுகள் இடம்பெற்றிருந்தால் சிறையில் அடைக்கப்பட்டிருக்கலாம் எனவும் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.