குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நாட்டில் சத்திர சிகிச்சை கூடமே இல்லாத வைத்திய சாலைகளில் சத்திர சிகிச்சை நிபுணர்கள் , மயக்க மருந்து நிபுணர்கள் கடமையில் உள்ளனர் என வடமாகாண சுகாதார அமைச்சர் ஞா. குணசீலன் தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் 115 ஆவது அமர்வு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை கைதடியில் உள்ள பேரவைக்கட்டடத்தில் நடைபெற்றது.
அதன் போது கருத்து தெரிவிக்கையிலையே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் ,
வடக்கில் மன்னார் , பருத்தித்துறை, தெல்லிப்பளை , சாவகச்சேரி உள்ளிட்ட வைத்திய சாலைகளில் வைத்திய நிபுணர்கள் இல்லை. சில வைத்திய சாலைகளில் ஓரிருவரே கடமையில் உள்ளனர். ஆனால் கிழக்கு மாகாணம் உட்பட ஏனைய மாகாணங்களில் உள்ள சில வைத்திய சாலைகளில் சத்திர சிகிச்சை கூடமே இல்லாத வைத்திய சாலைகளில் வைத்திய நிபுணர்கள் மயக்க மருந்து நிபுணர்கள் கடமையில் உள்ளனர்.
அவைகளை கவனத்தில் எடுத்து எமது மாகாணத்தில் உள்ள வைத்தியர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.