குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
சிம்பாப்வே நாட்டின் முன்னாள் முதல் பெண்மணி கிரேஸ் முகாபே மோசடியான முறையில் கலாநிதி பட்டம் பெற்றுக்கொண்டாரா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளது.
சிம்பாப்வேயின் ஊழல் மோசடி விசாரணை முகவர் நிறுவனத்தினால் இந்த விசாரணைகள் நடத்தப்பட உள்ளன.
சிம்பாப்வே பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்கள் சிலர், இந்த கலாநிதி பட்டம் குறித்து விசாரணை நடத்துமாறு கடந்த வாரம் முறைப்பாடு செய்திருந்தனர்.
2014ம் ஆண்டில் பல்கலைக்கழகத்தில் இணைந்து கொண்ட கிரேஸிற்கு சில மாதங்களில் கலாநிதி பட்டம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கலாநிதி பட்டத்திற்கான ஆய்வுகளை நடாத்துவதற்கு குறைந்தபட்சம் வருடமொன்றேனும் தேவைப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.