குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மூன்று சிரேஸ்ட பிரதிக் காவல்துறை மா அதிபர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சேவை தேவைகளி;ன் அடிப்படையில் இவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சிரேஸ்ட பிரதிக் காவல்துறை மா அதிபர் எஸ்.எம். விக்ரமசிங்க விசேட பாதுகாப்புப் பிரிவிலிருந்து, ஊவா மற்றும் மத்திய மாகாண பிரதிக்காவல்துறை மா அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சிரேஸ்ட பிரதிக் காவல்துறை மா அதிபர் ஜகத் அபேசிறிகுணவர்தன மத்திய மாகாண பதில் பிரதிக் காவல்துறை மா அதிபர் பதவியிலிருந்து, வடகிழக்கு மற்றும் மற்றும் வடமத்திய மாகாண சிரேஸ்ட பிரதிக் காவல்துறை மா அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ஊவா மாகாண சிரேஸ்ட பிரதிக் காவல்துறை மா அதிபராக கடமையாற்றிய யூ.பெர்னாண்டோ தென் மற்றும் சபரகமுவ மாகாணங்களுக்கான பிரதிக் காவல்துறை மா அதிபராக பதவி வகிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.