அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 13 பேர் உயிரிழந்துள்ளதுடன் 300-க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளுக்குள் சிக்க pஉள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கலி போர்னியாவில் புயல் காற்றுடன் கனமழையும் பெய்து வருவதனால் அங்குள்ள பல பகுதிகளில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
இதனால் அப்பகுதிகளில் உள்ள பல வீடுகள் மற்றும் கட்டிடங்கள் மண்ணில் புதைந்துளடளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்பு குழுவினருடன் உலங்கு வானூர்தியும் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் காட்டுத்தீ பரவியதனால் அங்கிருந்த மரங்கள், மற்றும் வனப்பகுதிகள் அழிந்தமையினால் தண்ணீரை உறிஞ்ச முடியாத நிலை ஏற்பட்டுள்ளமையே நிலச்சரிவு ஏற்படக் காரணம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.