ஈரான் மீது புதிய தடைகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விதிக்க வேண்டும் என தாம் எதிர்பார்ப்பதாக அமெரிக்க திறைசேரி செயலாளர். ஸ்டீவ் மனூஷின் (Steve Mnuchin) தெரிவித்துள்ளார். 2015ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தத்தின் கீழ் ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகளை எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்குள் விலக்குவது குறித்து டிரம்ப் முடிவெடுக்க வேண்டும் என வந்த தகவலையடுத்து ஸ்டீவ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சர்வதேச பாதுகாப்பின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு 2015ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தத்தை டிரம்ப் ஆதரிக்க வேண்டும் என ஐரோப்பிய சக்திகள் வலியுறுத்தி இருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. ஈரான் தனது அணுசக்தி எரிபொருள் உற்பத்தியை குறைத்துக் கொள்வதாக ஒப்புக் கொண்டதையடுத்து பொருளாதார தடைகள் நீக்கப்பட்டதை டிரம்ப் விமர்சித்திருந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டீவ் ஈரான் மீது புதிய தடைகள் விதிக்கப்படும் என தாம் எதிர்பாரப்;பதாக தெரிவித்துள்ளார்.