இலங்கை பிரதான செய்திகள்

யாழில் 5 பிள்ளைகளுடன் தாய் ஒருவர் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு

யாழில் 5 பிள்ளைகளுடன் தாய் ஒருவர் காணாமல் போயுள்ளதாக யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. யாழ். நல்லூர் அரசடி வீதிப் பகுதியைச் சேர்ந்த 36 வயதான பிரதீபன் திவானி என்பவரே குழந்தைகளுடன் காணமால் போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தாயாருடன் 11 வயதான பவநிதன் 9 வயதான அருள்நிதன் வயது 8 வயதான இரட்டைக் குழந்தைகளான யதுசியா, யஸ்ரிகா மற்றும் வயது 2 வயதான குழந்தை ஆகியோரே காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இவர்களைக் காணவில்லையென கடந்த 09ம் திகதி யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் உறவினர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குடும்ப தகராறு காரணமாகவே, தாயார் தனது 5 பிள்ளைகளுடன் காணாமல் போயுள்ளதாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாணம் காவல்துறையினர் இது குறித்த விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்;.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link