சவூதி அரேபியாவில் முதல் முறையாக பெண்களுக்கு கால்பந்தாட்ட போட்டிகளில் பார்வையாளர்களாக கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பாலின அடிப்படையில் அங்கு காட்டப்படும் பாகுபாடுகளை கலைவதன் ஒரு பகுதியாக இந்த தடை விலக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் ஜெட்டா நகரில், நேற்று நடைபெற்ற ஒரு கால்பந்தாட்ட போட்டியைக் காண பெண்கள் குடும்பத்தினருடன் அதிக அளவில் வந்திருந்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் பெண்களை விளையாட்டு மைதானங்களுக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டுள்ளதை மக்கள் வரவேற்கிறார்கள் எனும் பொருள்படும் பதிவுகள் அந்நாட்டு சமூக வலைத்தளங்களில் அதிகமானோரால் பகிரப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பெண்கள் அதிக அளவில் வருவதை ஊக்குவிக்கும் முகமாக அவர்களது கலாசார உடையை தங்கள் அணி வீர்கள் அணியும் சீருடைகள் நிறத்தில் சில கால்பந்து கழகங்கள வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவூதியில் பெண்கள் வாகனம் ஓட்ட இருந்த தடை கடந்த செப்டம்பர் மாதம் விலக்கப்பட்டுள்ளதுடன் அங்கு நேற்றையதினம் பெண் வாடிக்கையாளர்களுக்கான பிரத்யேக கார் விற்பனையகம் திறக்கப்பட்டிருந்தது. பல ஆண்டுகளாக அங்கு திரைப்படங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை கடந்த டிசம்பர் மாதம் நீக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. அந்நாட்டின் முடிக்குரிய இளவரசர் முகமத் பின் சல்மான் சவூதியில் இவ்வாறு பலவித மாற்றங்களை ஏற்படுத்த வருகின்றார் என்பது குறிப்பித்தக்கது