128
இலங்கையைச் சேர்ந்தவர்கள் 200 பேர் சவுதி சிறைகளில் சிறை வைக்கப்பட்டு உள்ளதாக சவுதிக்கான இலங்கைத் தூதுவராலயம் தெரிவித்துள்ளது. அவர்களுக்கு தேவையான சட்ட உதவிகளை வழங்குதல், மற்றும் அவர்களது நிலை தொடர்பில் ஆராய்வதற்காக தூதரகம் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக சவுதியின் இலங்கைக்கான தூதுவர் அஷ்மி தாசிமின் தெரிவித்தார்.
குறித்த இலங்கையர்கள் சவுதியின் சட்டதிட்டங்களை மீறியமை, மதுபானம், ஒழுக்கமற்ற முறையில் நடந்துக்கொண்டமை உள்ளிட்ட விடயங்களுக்காகவே இவர்கள் சிறைவைக்கப்பட்டுள்ளதாக சவுதியில் உள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.
Spread the love