154
இந்தியாவுக்கு சென்றுள்ள நிதியமைச்சர் மங்கள சமர வீர அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவாராஜை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பின் போது பொருளாதார அபிவிருத்தி ஒத்துழைப்புக்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வது தொடர்பில் விரிவான பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக இந்தியாவின் நிதி உதவிகளைப் பெற்றுக் கொள்ளும் நாடுகள் வரிசையில் இலங்கை முன்னிலையில் உள்ளது. சுமார் 2.63 பில்லியன் அமெரிக்க டொலர்களை இந்தியா இலங்கைக்கு வழங்குகின்றது. இந்த மொத்த நிதி உதவியில் 458 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மானிய உதவிகளாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Spread the love