255
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஜேவிபியின் ஊவா மாகாண சபை உறுப்பினர் சமந்த வித்தியாரத்னவுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார். அதிபர் ஒருவரை தாம் முழந்தாழிடச் செய்ததாக, சமந்தா வித்யாரத்ன தெரிவித்துள்ளமையானது தமக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தே இந்த வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது.
அதன்படி 5 மில்லியன் ரூபாய் நட்ட ஈடு கோரி, சமந்தா வித்தியாரத்னவுக்கு எதிராக பதுளை மாவட்ட நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
Spread the love