குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சி இரணைமடுகுளம் புனரமைக்கப்பட்டு நீர்பாசனத்திற்காக நீர் திறந்து விடப்பட்டு 98 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு விசேட பொங்கல் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இரணைமடு கனகாம்பிகை அம்மன் ஆலயத்தில் இரணைமடுகுளத்தின் கீழ் பயிர்ச்செய்கையில் ஈடுப்படுகின்ற கமக்கார அமைப்புக்களை சேர்ந்தவர்கள் 98 பானைகளில் பொங்கி விசேட பூசை வழிபாடுகளை மேற்கொண்டுள்ளனர்.
ஒவ்வொரு வருடமும் இவ்வாறு இரணைமடு கமக்கார அமைப்புகளினால் ஆண்டுகளை நினைவு கூறும் வகையில் பொங்கல் விழா ஏற்பாடு இடம்பெறுவது வழக்கமாகவுள்ளது. இன்றைய நிகழ்வில் கிளி நொச்சி மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், கமநல சேவைகள் நிலை உதவி ஆணையாளர் ஆயகுலன், நீர்ப்பாசனத்திணைக்கள பிரதிப் பணிப்பாளர் சுதாகரன் ஆகியோர் கலந்துகொண்டனர்