குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கட்டலோனியாவின் ஆட்சி அதிகாரம் கோரி போராட்டம் நடத்தி தற்போது வெளிநாடொன்றில் தஞ்சம் புகுந்துள்ள கட்டலோனிய ஜனாதிபதி மீளுவும் ஆட்சிக்கு வந்தால் ஆட்சி அதிகாரம் கலைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தனிநாட்டுப் பிரடகனம் செய்ததனைத் தொடர்ந்து கட்டலோனியாவின் ஜனாதிபதியாக கடமையாற்றிய கார்லெஸ் பூகிடமண்ட் ( Carles Puigdemont ) டின் அரசாங்கம் கலைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து காபந்து அரசாங்கமொன்று அமைத்து ஸ்பெய்ன் அரசாங்கம் ஆட்சி நிர்வாகத்தை மேற்கொண்டிருந்தது.
கட்டலோனிய தேர்தலில் மீளவும் கார்லெஸ் பூகிடமண்ட் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால், ஆட்சி அதிகாரத்தை மத்திய அரசாங்கம் முன்னெடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.