Home இலங்கைகூட்டு எதிர்க்கட்சியின் கட்சித் தலைவர் கூட்டம் இன்று

கூட்டு எதிர்க்கட்சியின் கட்சித் தலைவர் கூட்டம் இன்று

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கூட்டு எதிர்க்கட்சியின் கட்சித் தலைவர் கூட்டமொன்று இன்றைய தினம் நடைபெறவுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் இல்லத்தில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளது. தற்போதைய அரசியல் சூழ்நிலைமைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு 7 விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.


தேர்தல் பிரச்சாரப் பணிகள், ஜனாதிபதியின் பதவிக் காலம் குறித்து உச்ச நீதிமன்றம் வழங்கிய சட்ட விளக்கம், எதிர்கால தேர்தல் பிரச்சாரத் திட்டங்கள் உள்ளிட்டன குறித்து இன்றைய கூட்டத்தில் கலந்துரையாடப்பட உள்ளது. பாராளுமன்றில் பிரதமரின் நடவடிக்கைகள், பிணை முறி மோசடி அறிக்கை தொடர்பில் ஜனாதிபதி பின்பற்றிய வழிமுறைகள் உள்ளிட்டன குறித்து இங்கு கவனம் செலுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More