குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 16 பேர் கைது செய்யப்பட்டனர் என்று கடற்படையினர் தெரிவித்தனர். ‘நெடுந்தீவுக் கடற்பரப்பில் நேற்றிரவு தொழிலில் ஈடுபட்ட போதே அவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தொழிலுக்குப் பயன்படுத்திய 4 படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களும் தடுத்துவைக்கப்பட்டுள்ளன.
மலேரியா தொற்றுக் குறித்து அவர்கள் 16 பேரும் மருத்துவ சோதனைக்குட்படுத்தப்பட்ட பின்னர் யாழ்ப்பாணம் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் இன்று கையளிக்கப்படுவர்’ என்றும் கடற்படையினர் தெரிவித்தனர்.
நெடுந்தீவு அருகே 16 தமிழக மீனவர்கள் கைது
Jan 16, 2018 @ 04:21
நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி வந்ததாக தெரிவித்து ராமேஸ்வரம், மண்டபத்தைச் சேர்ந்த 16 மீனவர்கள் 4 விசைப்படகுகளுடன் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இன்று அதிகாலை இடம் பெற்றுள்ள இந்த சம்பவத்தின் போது படகுகளில் ஏறிய இலங்கைக் கடற்படையினர் அவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களை பறிமுதல் செய்ததோடு மீன்பிடி சாதனங்களையும் சேதப்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது
கைது செய்யப்பட்ட மீனவர்கள் இன்று காலை காங்கேசன்துறைக்கு கொண்டு செல்லப்பட்டு நீதிமன்றத்தில் முன்னலைப்படுத்தப்பட்ட நிலையில் சிறை வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.