328
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் உள்ளூராட்சித் தேர்தலுக்கான அறிக்கை இன்று யாழ்ப்பாணத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் வைஎம்சிஏ மண்டபத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற நிகழ்வில் கட்சியின் தலைவர் தி.ஸ்ரீதரன் (சுகு) மற்றும் வடக்கு, கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் அ.வரதராஜப் பெருமாள் ஆகியோர் இணைந்து இந்த தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வைத்தனர்.
‘மாநகர, நகர மற்றும் பிரதேச சபைகளின் ஊடாக மக்களின் அடிப்படைத் தேவைகளையும் சமூக, பொருளாதார அபிவிருத்தியையும் முன்நிறுத்துவோம்’ என்ற கொள்கையின் கீழ் அந்தக் கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
Spread the love