173
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
“இடைக்கால அறிக்கை- மாயைகளை கட்டு டைத்தல்” என்னும் தலைப்பில் தமிழ் மக்கள் பேரவையின் ஒழுங்கமைப்பில் கருத்தமர்வும் கலந்துரையாடலும், யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. இன்று மாலை 4 மணிக்கு ஆரம்பமாகியுள்ள இந்த கலந்துரையாடல் மற்றும் கருத்தமர்வில் வடமாகாண முதலமைச்சரும், தமிழ் மக்கள் பேரவையினர இணை தலைவருமான சீ.வி.விக்னேஷ்வரன் தலமை உரையாற்றினார்.
தொடர்ந்து “வடகிழக்கு தமிழர் தம் உரிமைகளின் கேடயமாக சர்வதேச சட்டம்” எனும் தலைப்பில் பேராசிரியர் முத்துகுமாரசாமி சொர்ணராஜா ( சிங்கப்பூர் தேசிய பல்க லைகழக சட்டத்துறை பேராசிரியர்)
உரையாற்றினார்.
தொடர்ந்து “இடைக்கால அறிக்கை மாயை களை கட்டுடைத்தல்” என்னும் தலைப்பில் யாழ்.பல்கலைகழக சட்டத்துறை விரிவுரை யாளர் குமாரவடிவேல் குருபரன் உரையாற்றினார். இந்நிகழ்வில் பெருமளவான மக்கள் கலந்து கொண்டனர்.
Spread the love