Home இலங்கை“இடைக்கால அறிக்கை – மாயைகளைக் கட்டுடைத்தல்”

“இடைக்கால அறிக்கை – மாயைகளைக் கட்டுடைத்தல்”

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
“இடைக்கால அறிக்கை- மாயைகளை கட்டு டைத்தல்” என்னும் தலைப்பில் தமிழ் மக்கள் பேரவையின் ஒழுங்கமைப்பில் கருத்தமர்வும் கலந்துரையாடலும், யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. இன்று மாலை 4 மணிக்கு ஆரம்பமாகியுள்ள  இந்த கலந்துரையாடல் மற்றும் கருத்தமர்வில் வடமாகாண முதலமைச்சரும், தமிழ் மக்கள் பேரவையினர இணை தலைவருமான சீ.வி.விக்னேஷ்வரன் தலமை உரையாற்றினார்.
தொடர்ந்து “வடகிழக்கு தமிழர் தம் உரிமைகளின் கேடயமாக சர்வதேச சட்டம்” எனும் தலைப்பில் பேராசிரியர் முத்துகுமாரசாமி சொர்ணராஜா ( சிங்கப்பூர் தேசிய பல்க லைகழக சட்டத்துறை பேராசிரியர்)
உரையாற்றினார்.
தொடர்ந்து “இடைக்கால அறிக்கை மாயை களை கட்டுடைத்தல்” என்னும் தலைப்பில் யாழ்.பல்கலைகழக சட்டத்துறை விரிவுரை யாளர் குமாரவடிவேல் குருபரன் உரையாற்றினார். இந்நிகழ்வில் பெருமளவான மக்கள் கலந்து கொண்டனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More