குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மதுபான விற்பனை மற்றும் மதுபான விற்பனை நிலையங்களை திறந்து வைத்திருக்கக் கூடிய காலம் குறித்த நிதி அமைச்சரின் வர்த்தமானி அறிவித்தல் ரத்து செய்யப்பட உள்ளது. அண்மையில் நிதி அமைச்சர் மங்கள சமரவீர, மதுபான விற்பனை நிலையங்களில் பெண்கள் பணியாற்ற முடியும் எனவும், பெண்கள் மதுபான வகைகளை கொள்வனவு செய்ய முடியும் எனவும், மதுபான விற்பனை நிலையங்கள் இரவு பத்து மணி வரையில் திறந்திருக்க முடியும் எனவும் அறிவித்தல் விடுக்கும் வகையில் வர்த்மானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டார்.
எனினும், இன்றைய தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த வர்த்தமானி அறிவித்தலை ரத்து செய்ய அமைச்சரவையில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.