இவர் கூத்துப்பட்டறையில் கணக்காளராக பணியில் சேர்ந்தார். அங்கு நடிகர்களை அருகில் இருந்து அவதானிக்கும் வாய்ப்பு கிடைத்ததாக கூறியுள்ளார். இவர் பெண் என்ற தொலைக்காட்சித் தொடரிலும் நடித்தார். கலைஞர் தொலைக்காட்சியின் நாளைய இயக்குநர் நிகழ்ச்சிக்காக பல குறும்படங்களில் நடித்துள்ளார். பீட்சா பட இயக்குநர் கார்த்திக் சுப்புராஜுடன் இணைந்து பல குறும்படங்களில் பணியாற்றியுள்ளார். சிறந்த நடிகருக்கான விருதை நார்வே குறும்பட தமிழ்த் திரைப்பட விழாவில் பெற்றார்.
இயக்குநர் செல்வராகவன் புதுப்பேட்டை படத்துக்கு திறன் தேர்வு வைத்ததில் கலந்து கொண்டு தனுசுக்கு நண்பனாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார். அதைத்தொடர்ந்து தமிழ்-கன்னட இரு மொழிப்படமான அகண்ட என்பதின் தமிழ் பதிப்பில் முன்னணி கதை மாந்தராக நடித்தார், கன்னட பதிப்பில் எதிர்மாறான கதை மாந்தராக நடித்தார். இப்படம் திரைக்கு வரவில்லை.
2012ல்ல் இவர் நடித்த மூன்று திரைப்படங்களும் வணிகரீதியாக பெருவெற்றி பெற்றன. சுந்தரபாண்டியனில் இவர் கதைநாயகனுக்கு எதிரியாக நடித்திருந்தார். கார்த்திக் சுப்புராஜின் பீட்சா படத்திலும் பாலாஜி தரணிதரனின் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்திலும் முன்னணி கதை மாந்தராக நடித்தார். நளன் குமரசாமியின் சூது கவ்வும் என்ற படத்திலும் முன்னணி கதை மாந்தராக நடித்தார். பண்ணையாரும் பத்மினியும் என்ற படத்தில் நடித்துள்ளார்.
தர்மதுரையில் அசால்ட்டாக இவர் ஆடும் ‘மக்க கலங்குதப்பா’ நடனம், எப்பொழுது டிவியில் ஒளிபரப்பப் பட்டாலும் பார்க்கிற ரசிகர்கள் ஏராளம். அத்தனை எதார்த்தமாக, தனது ஸ்டைலில் ஆடியிருப்பார். அத்துடன் நானும் ரவுடி தான், சேதுபதி, காதலும் கடந்து போகும், இறைவி, தர்மதுரை, றெக்க, ஆண்டவன் கட்டளை, கவண், விக்ரம்வேதா, கருப்பன் முதலிய சமீபத்திய திரைப்படங்கள் வாயிலாகவும் கவனத்தை ஈர்த்தார்.