குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வடக்கு , கிழக்கு மக்களால் கைவிடப்பட்ட மதத்திற்கு முன்னுரிமை என்பதனை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு மக்கள் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் , வடக்கு கிழக்கில் தமிழ் பௌத்தர்கள் வாழ்ந்து வந்தார்கள். வடக்கு கிழக்கில் வாழ்ந்த தமிழ் மக்கள் பௌத்த மதத்தை பின் பற்றி வந்தார்கள். பக்தி இலக்கிய காலத்தின் பின்னரான காலபகுதியில் வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் பௌத்த மதத்தை பின்பற்றுவதனை கைவிட்டு விட்டார்கள். அவ்வாறு தமிழ் மக்களால் கைவிடப்பட்ட பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்பதனை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளமுடியாது. எப்படி நாம் அதற்கு முன்னுரிமை கொடுக்க முடியும்?
விரும்பின் வடக்கு கிழக்கு தவிர்ந்த மற்றைய ஏழு மாகாணத்திலும் , பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கப்படலாம். ஆனால் வடக்கு கிழக்கில் அனைத்து மதங்களுக்கும் சமவுரிமை வழங்கப்பட வேண்டும். நாம் கைவிட்ட ஒன்றுக்கு முன்னுரிமை வழங்க முடியாது என மேலும் தெரிவித்தார்.